திமுக -வுடன் கூட்டணி சேரப் போகும் பிரபல கட்சி.!

திமுக + எஸ் டி பி ஐ

திமுக -வுடன் கூட்டணி சேரப் போகும் பிரபல கட்சி.!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகிறார்.

தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து பல முக்கிய கட்சிகளும் இணைந்து வரும் நிலையில் தற்போது கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி பாஜகவுடன் அதிமுக இணைந்ததை தொடர்ந்தது தற்போது திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வரை அக்கட்சியின் தலைவர் முபாரக் சந்தித்தது இதற்கு வலு சேர்த்து உள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியும் கூட்டணி பேச்சு வார்த்தையில் உள்ள நிலையில் ஜனவரியில் கூட்டணி முடிவு எடுக்கப்படும் என எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.