ஆய்க்குடியில் எஸ்.பி தலைமையில் நாளை நடைபெறும் சார்பு ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு .!
தென்காசி
ஆய்க்குடியில் எஸ்.பி தலைமையில் நாளை நடைபெறும் சார்பு ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு
பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்
தென்காசி டிச 20
2025 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335, மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்ப தாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் நியமிக்கப் பட்டுள்ளனர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கான ஆலோசனை கூட்டம் இன்று ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில் தேர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்ப தாரர்களை
முறையாக சோதனை செய்து அவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுதும் போது விண்ணப்பத்தனர்.

பின்பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்தும் காவல் துறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இத்தேர்வு பணியில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
