அகவிழி விளையாட்டு வணிக வளாக திறப்பு விழா பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.!

தென்காசி

அகவிழி விளையாட்டு வணிக வளாக திறப்பு விழா பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.!

அகவிழி விளையாட்டு வணிக வளாக திறப்பு விழா பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தென்காசி டிச 21

தென்காசி மாவட்டம், மத்தளம் பாறை சாலையில் அமைந்துள்ள அகவிழி பன்னோக்கு விளையாட்டு வணிக வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.டாக்டர் முகமது முஸ்தபா வரவேற்புரை ஆற்றினார்.  

தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவி மைதிலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் கவுன்சிலர் அபூபக்கர், திமுக நகர பொருளாளர் ஷேக் பரீத்,மைதீன், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம் கணேசன், வட்டார தலைவர் பெருமாள்,காங்கிரஸ் நகர துணைதலைவர் சித்திக்,பிரபாகரன், அரவிந்த், சம்சுதீன், மற்றும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர் முடிவில் முகம்மது முஸ்தபா நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்