தென்காசியில் பாமக மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம்.!

தென்காசி

தென்காசியில் பாமக மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம்.!

தென்காசியில் பாமக மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம்

தென்காசி டிசம்பர் 12

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான, மருத்துவர் ராமதாஸ் அறிவுறுத்தலின்படி சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி உரிமைகளை பெற்றிட தமிழக அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி, தெற்கு மாவட்ட தலைவர்கள் சிவராஜ், உதயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், தெற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி. சுந்தர், மாவட்ட அமைப்புச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாமி, குலசேகரன், தங்கராசு, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொது செயலாளர் முரளி சங்கர், மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான திருமலைக் குமாரசாமி யாதவ், மாநில துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரை ஆற்றினர்.

இந் நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் மகேஷ் என்ற மாடத்தி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மகளிர் அணி ஒன்றிய செயலாளர்கள் மணிமேகலை, நித்திய கல்யாணி, ராமலட்சுமி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க உரை ஆற்றினர்.
இதில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டனர்.

இந் நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, நிர்வாகிகள் உறுப்பினர்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட பொருளாளர் மரிய செல்வம் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்