குற்றாலம் மலை பகுதியில் அணை கட்ட வேண்டும், தென்காசியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி .!

தென்காசி

குற்றாலம் மலை பகுதியில் அணை கட்ட வேண்டும், தென்காசியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி .!

குற்றாலம் மலை பகுதியில் அணை கட்ட வேண்டும், தென்காசியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

தென்காசி, ஆக - 29

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் வகையில் மலைப்பகுதியில் அணை கட்ட வேண்டும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கடையநல்லூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவருமான எஸ். ஆர்.அய்யாத் துரையின் உறவினரும்,  கடையநல்லூர் வட்டார த.மா.கா. விவசாய அணி தலைவருமான காசி தர்மம் ஆர்.முப்புடாதி என்ற துரை எம்.லெட்சுமி  ஆகியோரின் இல்ல திருமண விழா காசிதர்மம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

 "ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. குற்றாலத்தை உலகளவில் 
சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும். ஆண்டு முழுவதும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும் வகையில் சிறந்த  பொறியாளர்களை கொண்டு நன்கு திட்டமிட்டு மலைப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். விருதுநகர் - 
கொல்லம் மார்க்கத்தில் இரண்டு வழித்தட ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். சுரண்டை இரட்டைக்குளம் பாசன கால்வாய் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும்.

6  மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிவகிரி சென்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதோடு வனவிலங்குகளால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய 
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழர் ஒருவரை துணை குடியரசுத் தலைவராக உயர்ந்த பதவியில்  அமர்த்தி அழகு பார்க்க பாஜ கூட் டணி முயன்று வருகிறது. அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது தொடர்பாக பிரதமர் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே தமாகாவின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் வலுவாக உள்ள பாஜ-அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது” என்றார்.,

பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், தென்காசி மத்திய மாவட்ட தமாகா தலைவர் எஸ்.ஆர்.அய்யாத்
துரை, மேற்கு மாவட்டத் தலைவர் என்.டி.எஸ்.சார்லஸ், விருதுநகர் ராஜபாண்டியன், சரவணன், தாஸ், காசிதர்மம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கம், இளைஞர் அணி தென் மண்டல செயலாளர் கார்த்திக், விவசாயஅணி முப்புடாதி, முருகன், பூமாரியப்பன், மக்தூம், கார்த்திக்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்