கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த எம்.எல்.ஏ .!
கிருஷ்ணகிரி
டாக்டர்.B.R.அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
