தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை  செய்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் மனு.!

தென்காசி

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை  செய்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் மனு.!

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ரூ.1 கோடி நிவாரணம் -அரசு வேலை வழங்க வேண்டும் 

கலெக்டரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை !

தென்காசி, டிச - 04

தென்காசியில் அரசு வழக்கறிஞர்  முத்துக் குமாரசாமி நேற்று  அவரது அலுவலகத்தில் இருந்தபோது மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.

கொலை செய்யப்பட்ட வழக்கறிஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தென்காசி செங்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி நேற்று  வெட்டிக் கொலை செய்யப் பட்ட நிலையில் தகவல் அறிந்த தென்காசி செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் தென்காசி புதிய பஸ் நிலைய முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அரசு வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையேல் வழக்கறிஞரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் குற்றவாளி கண்டுபிடிக்க  2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை காவல்துறை நெருங்கி விட்டது எனவே விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் எனவே நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சமாதானம் பேசிய நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனாலும் இன்று வரை குற்றவாளியை கைது செய்யாததால் தென்காசி பார் அசோசியேசன் மற்றும் அட்வகேட் அசோசியேசன் செங்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் ஆலங்குளம் வழக்கறிஞர்கள் ஆகியோர் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

 அந்த கோரிக்கை மனுவில் தென்காசியில் பட்ட பகலில் தனது அலுவலகத்தில் இருந்த ஒரு வழக்கறிஞரை அதுவும் அரசு வழக்கறிஞரை மர்ம நபர் ஒருவர் அவரது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார் அவரை போலீசார் இதுவரை கைது செய்ய வில்லை எனவே  வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த குற்றவாளியை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் கொலை செய்யப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும்  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்தனர்.

மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழக அரசுக்கு இந்த கோரிக்கை மனுவை உடனடியாக அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வேன் என்று உறுதி கூறினார். 

இதில் தென்காசி பார் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார், அட்வகேட் அசோசியேசன் தலைவர் மாடக்கண் ஆகியோர் தலைமையில் தென்காசி  வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத்,  ஜெகதீசன் கார்த்திக்குமார்,
மாடசாமி பாண்டியன்,  ஆக்ஸ்போர்டு திருமலை,அருண், ஜெபா, ஆறுமுகம் என்ற கண்ணன் நிஷாந்த் கண்ணன், செல்வகுமார், தாஹிரா பேகம், மஞ்சு கிருஷ்ணா, சங்கர சுப்பிர மணியன்  ஆலடி மானா, சண்முகவேலு, மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்