தென்காசியில் இருந்து காசிக்கு வாகன பயணம் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.!
தென்காசி
தென்காசியில் இருந்து காசிக்கு வாகன பயணம் நயினார் நாகேந்திரன்
எம் எல் ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்
தென்காசி டிசம்பர் 02
காசி தமிழ் சங்கம் 4.0 ஒரு பகுதியாக தென்காசியில் இருந்து காசிக்கு, வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு, 15 கார்கள் புறப்படும் நிகழ்ச்சி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைய, ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன்ஆகியோர் வாகனத்தினை தென்காசி காந்தி சிலை முன்பிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், நெல்லை மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம், தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், பொருளாளர் கோதை மாரியப்பன், நகர பார்வையாளர் செந்தூர் பாண்டியன், நகரத் தலைவர் சங்கர சுப்பிர மணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தி முருகன், சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார்,
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கி முத்து, இளைஞர் அணி மாவட்ட தலைவர் விவேக் குமார், மகளிர் அணி மாவட்ட தலைவி குணசீலா, சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முத்து செல்வன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், தெற்கு ஒன்றிய பார்வையாளர் ராஜ குலசேகரபாண்டியன் முருகன் இளைஞர் திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் முரளிதரன் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வீரபத்திரன், வழக்கறிஞர்கள் முத்துகிருஷ்ணன், மாரிமுத்து உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
