வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் -2026, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் நிரப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் -2026, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் நிரப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் -2026, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.கீதா ராணி, வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ