இலஞ்சி இராம சுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தேசிய சட்ட தின விழா.!

தென்காசி

இலஞ்சி இராம சுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தேசிய சட்ட தின விழா.!

இலஞ்சி இராம சுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தேசிய சட்ட தின விழா

தென்காசி  நவ 25 

தென்காசி மாவட்டம் இலஞ்சி இராம சுவாமி பிள்ளை மேல் நிலைப்பள்ளியில் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகடமி சார்பில்  76 வது தேசிய சட்ட தின விழா  நடைபெற்றது.

இவ் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன்மேலாளர் செந்தில் குமார் , உதவித் தலைமை ஆசிரியர் சித்திரை சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.என்.சி.சி,
ஜே.ஆர்.சி. தேசிய பசுமைப் படை, சாரண, சாரணிய மாணவர்கள் வரவேற்றனர். ஆசிரியர் கிருஷ்ணம்மாள் தலைமையில்
மாணவர்கள் இறை வணக்கம் பாடினர்.
ஆசிரியர் முத்துக் குமார் அறிமுக உரையாற்றினார்.  

கூடுதல் மாவட்ட  உரிமையியல் நீதிபதி கே என்  குரு   சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து தேசிய சட்ட தின  வாழ்த்து செய்தியாக நாம் அனைவரும் சமம், சகோதரத்துவத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை பயன்படுத்தி  அடிப்படை கடமைகளை  கடைப்பிடித்து  நாம் வாழ வேண்டும் எனவும் , மேலும் மாணவர்கள் பெறும் நல்ல கல்வி அவர்தம் வாழ்வை உயர்த்தும் , அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசு வழங்கி வாழ்த்தினார் , பின்னர் நீதிபதி  தலைமையில் மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் அரசியலமைப்பு முகவுரையை  உறுதிமொழியாக ஏற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் ஈதல் அறக்கட்டளை சார்பில் பாராட்டுச் சான்று வழங்கப் பட்டது.

விழாவில் ஓவிய ஆசிரியர் கணேசன், என் சி சி அலுவலர் செந்தில் பாபு  உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை  அரசு வழக்கறிஞர் முருகன் ,ஆகாஷ் அகடமி ஆசிரியர் ஆவுடைவிநாயகம் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்