தமிழக காங்கிரஸ் கட்சியின் முதன்மை செயலாளர் செல்வத்திடம் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு  தனது விருப்ப மனுவினை வழங்கினார்.!

கிருஷ்ணகிரி

தமிழக காங்கிரஸ் கட்சியின் முதன்மை செயலாளர் செல்வத்திடம் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு  தனது விருப்ப மனுவினை வழங்கினார்.!

கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முதன்மை செயலாளர் செல்வத்திடம் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு 
தனது விருப்ப மனுவினை வழங்கினார்.

தமிழகத்தில் வருகின்ற மே மாதம்  நடைபெற உள்ள சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொடுக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து இருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி.சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக  போட்டியிட சென்னையில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் செல்வத்திடம்
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,
காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான நாஞ்சில் ஜேசு தனது விருப்ப மனுவை வழங்கினார்,

அப்போது பேசிய நாஞ்சில் ஜேசு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி உள்ளதாகவும், இதில் நகர தலைவராக பணிகள், தொடர்ந்து மாவட்ட தலைவராகவும், மாவட்ட திட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டதோடு, காங்கிரஸ் மாநில பேச்சாளராகவும் செயல்பட்டு வருவதால் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கேட்டு சத்திய மூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினைக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, ரயில்வே கோட்ட திட்ட குழு உறுப்பினரும், மாவட்ட துணைத் தலைவருமான ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ