மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் -!

கிருஷ்ணகிரி

மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் -!

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகள் மாறி மாறி கடிதம் எழுதுவதை கைவிட்டு, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மா விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன கோஷங்களை எழுப்பினார். 

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரேமலதா...
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் இங்கு மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் தான் நல்ல தீர்ப்பு தர வேண்டும் என்றார். மேலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் வாழ்வாதாரத்தை எப்படி நிலை நிறுத்த முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு ஏக்கர் மா சாகுபடி செய்ய 41 ஆயிரம் ரூபாய் செலவாகிறது, ஆனால் விவசாயிகளுக்கு வருவாயாக 18 ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கிறது. 
அதேபோல் மாம்பழ தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு 53 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார். காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட கே ஆர் பி அணைக்கு பிறகு ஒரு அணை கூட கட்டப்படவில்லை ,

மேலும் அணையை தூர்வாராமல் மக்கள் பணத்தை ஆட்சியாளர்கள் தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் கனிம வளத்தை கொள்ளை அடித்து மக்களை வஞ்சிக்கின்றனர் என பேசினார்.

தொடர்ந்து சுய உதவி குழு கடன், நகை கடன் தள்ளுபடிக்கு நிதி இல்லை என கூறுகிறார்கள். நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் மத்திய மாநில அரசுகள் மாறி மாறி கடிதம் போடுவதை விட்டு மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மா விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை வலியுறுத்தும் வகையில் மா விவசாயிகள் குடும்பத்தின் உருவ பொம்மைகளை மா மரங்களில் தூக்கிலிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்தது. கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ