கவுஸ் காதரி தர்காவில் நடைபெற்ற உரூஸ் திருவிழா.!
கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கவுஸ் காதரி தர்காவில் நடைபெற்ற உரூஸ் திருவிழாவில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவரும், நுகர்வோர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதில் மத வேறுபாடுகள் இன்றி ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கவுஸ் காதரி தர்காவில் 45 ஆம் ஆண்டு உரூஸ் திருவிழா ஹஞ்ரத் முஹமத் நயீம் ஷா காதரி மற்றும் மொகல்வாசிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கி உரூஸ் திருவிழா துவங்கி நடைப்பெற்று வந்தது
இவ்விழாவினைத் தொடர்ந்து தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உரூஸ் விழாவினைத் தொடர்ந்து மிகப்பிரண்டமான முறையில் வண்ணமலர்கள் அலங்காரத்துடன் சந்தனகுடம் ஊர்வலம் நடைபெற்றது,

இதில் வான வேடிக்கை மற்றும் மேளத்தாளங்களுடன் நடைபெற்ற ஊவலமானது கொத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஜாதி மத வேறுபாடுகள் இன்றி ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாக்பூரை சேர்ந்த நஷீர் அலி, பெல்காமை சேர்ந்த ரஹீப் சுல்தானி ஆகியோரின் தலைமையிலான போட்டி கவாலி நடைபெற்றது.
இதனை கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவரும், சமுக நுகர்வோர் பாதுகப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான
டாக்டர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்து பேசுகையில் மத நல்லிணத்திற்கு எடுத்து காட்டாக விளங்கும் இந்த உரூஸ் திருவிழாவில் கலந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் இந்த விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சாதி மத பேதம் இன்றி ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டுள்ளது மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார்.
இந்த உரூஸ் விழாவில் முஹமத் உஸ்மான், முஹமத் கவுஸ், அப்தூல் ரஹீமான், நதீம் ஷா காதரி, தன்வீர், நூர், முஸ்தபா, ராஹீம், சுபோர், மற்றும் மகராஜாகடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
