தென்காசியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் .!

தென்காசி

தென்காசியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் .!

தென்காசியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் 

தென்காசி நவ 10


தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து ஓரணியில் தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர சரி பார்ப்பு எனும் பெயரில் நடைபெறும் ஜனநாயக படுகொலையை ( SiR ) கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார் முன்னிலையில் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர்  ராம உதயசூரியன், சுதா பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மார்க்ஸிஸ்ட் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது யாகூப், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன், விசிக மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவருணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் சேக்தாவூது நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்