பர்கூர் தெற்கு ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பர்கூர் தெற்கு ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைப்பெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் பர்கூர் ஒன்றிய ஊராட்சிகளில் கழக ஆட்சி அமைந்தபிறகு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலும், அரசின் பல்வேறு திட்ட நிதிகளில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும், கலைஞர் உரிமை தொகை மற்றும் இனிவரும் காலங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் சாதனைகளையும் விளக்கி சிறப்புறையாற்றினர்.


உடன் மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் என அனைவரும் கிராமசபா கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
