அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய இரத்த மையம் திறப்பு. !

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய இரத்த மையம் திறப்பு. !

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  20.11 .25 அன்று (வியாழக்கிழமை) புதிய ரத்த மையத்தை முதல்வர் கே. சத்தியபாமா, எம்.எஸ். (ஜெனரல் சர்ஜன் ) திறந்து வைத்தார்.

நாளது வரை கிருஷ்ணகிரி நகர் பகுதியில்  இயங்கி வரும் மருத்துவமனையில் இரத்த மையம் கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் இயங்கும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்து நவீன ரத்த மையமாக புதிதாக பொதுமக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த இரத்த மையம் மூலம் அவசர தேவைகளுக்காக இரத்த சேகரிப்பு , சேகரித்த இரத்தத்தினை பாதுகாப்பாக சேமித்து வைத்தல், தேவையான அனைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் மற்றும் தேவைப்படும் நோயாளர்களுக்கு அவர்களின் ரத்த பிரிவுகளுக்கு ஏற்றவாறு விநியோகம் செய்தல் போன்ற வகைகள் இனி புதிய மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் இதற்கென பிரத்தியேக இரத்த மைய உரிமம் பெறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் இரத்தக் கொடையாளர்கள் தமது பிறந்தநாள் திருமணநாள் மற்றும் தங்களுக்கான குடும்ப உறவினர்களின் சிறப்பு நாட்களில் இரத்த தானம் வழங்க முன் வருவோர் இனி கிருஷ்ணகிரி புதிய இரத்த மையத்தில் இரத்ததானம் (குருதிக்கொடை) வழங்கிடுமாறும், அவசர தேவைகளுக்காக அரிதான இரத்த  பிரிவு வகைகளில் உள்ளவர்களும், கொடையாளர்களும் இந்த இரத்த மையத்தில் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப் புதிய இரத்த மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு (66) அறுபத்து ஆறாவது முறையாக  தனது இரத்தத்தினை தானம் செய்தார். 

மேலும் அவர் கூறும் போது.......
இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது எனவும் இது ஒரு சமூகப் பொறுப்பாகவும், மனிதநேயத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது எனவே அனைவரும் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார்

இரத்த மையத்தின் உதவி பேராசிரியர் மருத்துவர் ஜே வசந்தகுமார் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்நோயாளியாக சேர்க்கப்படும் நோயாளிகளில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இந்த இரத்த  மையத்திலிருந்து இரத்தம் வழங்கப்பட்டு இன்னுயிர் காக்கப்படுகிறது. 

ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு மூன்று ஆயிரம் யூனிட் தேவைப்பட்டு வந்த நிலையில் புதிய மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை துவக்கப்பட்டு பல்வேறு துறைகளின் நவீன அறுவை சிகிச்சைகளுக்காகவும் இரத்த சோகை உள்ளவர்களுக்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனுக்குடன் தேவைப்படும் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்குவதற்கு தற்போது ஆண்டிற்கு 9000 யூனிட் தேவைப்படுகிறது. தேவைப்படும் அனைவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இலவசமாகவே அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு உடனுக்குடன்  இரத்தம் வழங்கப்படுகிறது.

தானத்தில் சிறந்தது இரத்ததானம் ஆகும். உயிரோடு நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் காலத்தில் ரத்ததானம் வழங்கிட கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனத்துறைகளில் பணியாற்றுபவர்கள் தாங்களாகவோ அல்லது செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், ஜேசீஸ் மற்றும் சமூக நல சங்கங்கள் சார்பாகவோ அல்லது தனி நபராகவோ இரத்த தானத்தை செய்திட கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்து தானம் செய்து குருதி கொடையாளராக உருவாக வேண்டும் எனவும், குழுவாக தானம் செய்ய விரும்புவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு குழுவினருடன் நேரில் வந்து இரத்த தானம் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. பி. சந்திரசேகரன், துணை முதல்வர் மரு சாத்விகா, நோயியல் துறை  பேராசிரியர் மற்றும் ரத்த வங்கித் துறை பொறுப்பு மருத்துவர் மரு. வமிதா, நிர்வாக அலுவலர்  சரவணன், நிர்வாக அலுவலர் திருமதி சுமதி, செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி மகாலட்சுமி, மற்றும் ரத்த வங்கியில் பணிபுரியும் செவிலியர் குழுவினர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் கிருஷ்டல் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ