தென்காசியில் காங்கிரஸ் சார்பில் தேவர் சிலைக்கு பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்தார்.!
தென்காசி
தென்காசியில் காங்கிரஸ் சார்பில் தேவர் சிலைக்கு பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்தார்
தென்காசிஅக் 30
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், டி.கே பாண்டியன், மாவட்ட பொது செயலாளர்கள்
ஏஜிஎம். கணேசன், சந்தோஷ், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், வட்டாரத் தலைவர் பெருமாள், ஏ எல் என் ஆறுமுகம், குற்றாலம் பேரூராட்சி தலைவர் துரை, மகளிர் காங்கிரஸ் பூமாதேவி, நகர துணைத் தலைவர் தேவராஜன், சித்திக், பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக், நகர செயலாளர் ராமச் சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் இசக்கிரவி, மாடசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
