கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த சிவசக்தி நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த சிவசக்தி நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்பு. குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம் கே.திப்பனப்பள்ளி அருகில் 3 ஆம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, உரிகம், வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், கப்பல் வாடி, மாரசந்திரம், ராயக்கேட்டை, மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றிருந்தன, வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு கன்றுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில்100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பல்வேறு பரிசுகள் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட கன்றுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள்.
இந்த கன்று விடும் விழாவினை சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
