சூளகிரி அருகே குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்கவிடாமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்கவிடாமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்கவிடாமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஆலசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி
ஸ்ரீ புரிமுனியப்பா  இவர் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் வசித்து வருகிறார்.

இவருடைய மகன்களான அம்ரேஷ் , நாகேஷ் ஆகியோர் பெங்களூரில் வேலைபார்த்து வருவதால், ஆலசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த பிரகாஷ், நாராயணசாமி உள்ளிட்ட பலர் எங்கள் கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த ஒரு சுப, துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளக்கூடாது, கோவில்களுக்கு சாமி கும்பிட வரக்கூடது, எங்கள் கிராமத்தில் நீங்கள் குடியிருக்க தகுதியற்றவர்களாக உள்ளீர்கள் என கூறி சாதி ரீதியாக கொடுமை கொடுமைப் படுத்தி வருவதாகவும் குடியிருந்த வீட்டை இடிப்பது போன்ற தொல்லைகளை தொடர்ந்து கொடுத்து வருவதால் பாதுகாப்பு கேட்டு சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறி பாதிக்ப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்க விடாமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மனுவினை கொடுத்தனர்.

மேலும் இது குறித்து கூறிய நாகேஷ்.....  
கடந்த பல தலைமுறைகளாக ஆலசானப்பள்ளி கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு படித்து பெங்களூரில் வேலைப்பார்த்து வருவதால் ஆலசானப்பள்ளி கிராமத்தை சேர்த்தவர்களுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால் எங்களை நிம்மதியாக வாழ விடுவது இல்லை. வயதான பெற்றோர்களை மிரட்டிவருவதோடு இந்த கிராமத்தில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்தது மட்டுமின்றி வீட்டை இடித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்,

மேலும் ஆலசானப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளக் கூடாது என மிரட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை வழியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை இதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து ஆதிக்க ஜாதியினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ