தென்காசிடாக்டர் மு.ரா எழுதிய புத்தக வெளியீட்டு விழா .!
தென்காசி
தென்காசிடாக்டர் மு.ரா எழுதிய புத்தக வெளியீட்டு விழா
தென்காசி, அக் - 27
தென்காசியில் பிரபல எலும்பு மூட்டு மருத்துவர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் (மு.ரா) எழுதிய கொசுக்கடி குறுங்கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
தென்காசி பிரபல எலும்பு மூட்டு மருத்துவர் டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் (மு.ரா)எழுதிய கொசுக்கடி என்ற குறுங்கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா தென்காசி - ஆய்க்குடி செல்லும் பாதையில் உள்ள டி.ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.செல்வமுருகேசன் பல்கலை வளாக அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மூத்த வழக்கறிஞர் இரா. ஜெகதீசன் தலைமை வகித்தார். இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் காந்திமதி மோகன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந் நிகழ்ச்சியில் டாக்டர் மு.ரா எழுதிய கொசுக்கடி என்ற குறுங்கவிதை தொகுப்பு புத்தகத்தை தென்காசி மூத்த வழக்கறிஞர் இரா ஜெகதீசன் வெளியிட இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் காந்திமதி மோகன கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டை
ஸ்ரீ நாடி மருத்துவமனை மருத்துவர் சி.ஜே. இரவி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் மருத்துவர் தே.பலராமகிருஷ்ணன், ஆகியோர் கொசுக்கடி குறுங்கவிதை நூலாசிரியர் டாக்டர் மு.ரா.வை
பாராட்டி,வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நூலாசிரியர்
டாக்டர் மு.ரா. சார்பில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் செல்வி எம்.வி.பிரியதர்ஷினி நினைவு பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் டாக்டர் மு.ரா. ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.சங்கரராமன், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், தென்காசி வழக்கறிஞர்கள் மற்றும் டாக்டர் முத்துராமன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
