மாதா பட்டணம் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா .!

தென்காசி

மாதா பட்டணம் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா .!

மாதா பட்டணம் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

சிவ பத்மநாதன் பரிசுகள் வழங்கினார்

தென்காசி ஜூலை 5

தென்காசி மாவட்டம் மாதா பட்டணம் ச .ச.வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன்கலந்து கொண்டு விளையாட்டை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு நிர்வாக செயலாளர் அருட்தந்தை அந்தோணிசாமி  தலைமை தாங்கினார்  ச.ச.வி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிபியா முன்னிலை வகித்தார் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் வரவேற்று பேசினார்.

திருமுருகன் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமதி   தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.ஐந்தாங் கட்டளை தலைமை ஆசிரியர் ஜீவா ஜெயமணி கோவிலுந்து TDTA பள்ளிதலைமை ஆசிரியர் சாராள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதன்  அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்டு ஓட்டபந்தயத்தை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர் கரும்பனூர் கவுன்சிலர் நாகராஜ் மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் கோவிலூற்று கிளைக் கழகச் செயலாளர் ஜெயராஜ் நாகல்குளம் செயலாளர் காசி பாண்டி நெல்லையப்ப புரம் சுப்பிரமணியன் ஏ.பி நாடானூர் குணா, புங்கம்பட்டி ராஜபாண்டியன், வடமலைப்பட்டி மகாராஜன், பூலாங்குளம் நைனார் சுப்ரமணியன், வழக்கறிஞர் பால்ராஜ் கார்த்திக் ,ராமர் , ஐந்தாம் கட்டளை ஊராட்சி உறுப்பினர் சுப்ரமணியன் சுரேஷ், குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சேர்மராஜன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்