தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகத்தினை முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் புதியதாக உதயமாகி உள்ள தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சங்கத்தின் கொடி ஏற்று விழா நடைபெற்றது,
சங்கத்தின் மாவட்ட தலைவர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தினை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சங்க கட்டிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்,
இந்த விழாவின்போது துரை மோட்டார் உரிமையாளர் துரை, எ.வி.டி. ஒசூர் தண்டபாணி, ராஜா, கார்த்திக், கோவிந்தராஜன், பால காந்தி, பெருமா, சத்யா, சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவில் மணிமேகலை, வெங்கடேசன், வடுக்கம்பட்டி அப்பாதுரை, குமார், முனியப்பன், சந்திரசேகர், தணிகாசலம், ஜெயபால், ரமேஷ், மணி, பூபதி, பரசுராமன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ