காந்திமண்டபம் காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அறவழியில் போராடும் முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்ரமணியன்.!

கிருஷ்ணகிரி

காந்திமண்டபம் காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அறவழியில் போராடும் முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்ரமணியன்.!

காவேரிப்பட்டணம் காந்திமண்டபம் காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அறவழியில் போராடும் முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்ரமணியன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மையப்பகுதியில் உள்ளது காந்தி மண்டபம். இந்த காந்தி மண்டபம் குறித்து என்றென்றும் இது காங்கிரஸ் கட்சியின் சொத்து என்று மறைந்த நாகராஜ் மணியகாரர் மற்றும் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நிர்வகித்து வந்தனர்.

ஆனால் சிலர் தூண்டுதல் பேரில் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த மண்டபம் தற்காலிகமாக பூட்டப்பட்டு புதர் மண்டி காணப்படுகிறது. இந்த காங்கிரஸ் சொத்தை மீட்பதற்காக பல ஆண்டுகளாக காவேரிப்பட்டினம் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல் .சுப்பிரமணியம் தலைமையில் போராடி வருகின்றனர். 

தற்போது மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை மீட்கும் குழு அதற்கான நடவடிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழு பார்வையிட்டு சென்றுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  
காவேரிப்பட்டினத்தில் உள்ள காந்தி மண்டபம் மீட்கப்படும்,  அவ்வாறு மீட்கப்பட்டால் அதற்கான முயற்சிகள் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் மற்றும் காவேரிப்பட்டினம் காங்கிரஸ் நிர்வாகிகளின் முழு முயற்சி வெற்றி பெறும் என்று அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ