தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான மாநாடு, !

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான மாநாடு, !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான மாநாடு,  குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி ஊராட்சி செயலாளர், மாநில துணை ஒருங்கிணைப்பாளர், மாநில அமைப்பு செயலாளர் டிஎன்பிஎஸ்ஏ தி. செங்கதிர் செல்வன் அறிக்கை. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு  சார்பாக 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி திருச்சியில்  நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து நிலை பணியாளர்களும்.ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் கோரிக்கை  மாநாடு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும். கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளருமான அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெறுகிறது.

கிராம ஊராட்சிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு அன்றாட. சுத்தமான குடிநீர் வழங்கும் பணியாளர்களுக்கும், சுற்றுப்புற தூய்மையை வைத்துக் கொள்ளும் பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறையில் இரவு பகல் பாரமல்  அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் அனைத்து கிராமங்கள் மற்றும் பட்டிதொட்டியெல்லாம் சென்றுபோய் சேர்க்கும் அனைத்து நிலைபணியாளர்களின்  கோரிக்கை முன் வைத்து 16 அம்சகோரிக்கை மாநாடு திருச்சியில் நடைப்பெறுகிறது. 

இந்த மாநாட்டிற்க்கு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் அனைவரும்  அலை கடலென கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன் என  தி.செங்கதிர் செல்வன் அறிவிப்பு வெளியிட்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ