தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தின விழா..!
தென்காசி

தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தின விழா.
தென்காசி ஆகஸ்ட் 16
இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் சமூக ஆர்வலருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யாகூப் தலைமை வகித்து பேசும்போது,
நல்லிணக்க சிந்தனைகளை வளர்த்தெடுப்போம்!..
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி யின் சுதந்திர தின வாழ்த்து செய்தியை தெரிவித்து நமது நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை பூரிப்புடன் எதிர்கொள்கிறோம்.
ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு காலக் கட்டங்களில்; பல்வேறு வடிவங்களில்; பல்வேறு இடங்களில்; பல்வேறு ஆளுமைகளால் முன்னெடுக்கப்
பட்டது.
நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்கப்
பட்ட முதல் சுதந்திரப் போராட்ட வடிவம் என்பது 1857 -ல் மன்னர் பகதூர்ஷா ஜாபர் தலைமையில்; ஜான்சிராணி லெட்சுமிபாய் உள்ளிட்டோர் நடத்திய புரட்சியை கூறலாம்.
அதன்பிறகு காந்தியடிகள் தலைமையில் தொடங்கிய அகிம்சை வழி போராட்டம் முழுமையான விடுதலைக்கு வித்திட்டது.
அத்தருணத்தில் ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அபுல் கலாம் ஆசாத் , வல்லபாய் படேல், தோழர் பகத்சிங் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் தங்களின் அளப்பரிய விடுதலை தொண்டுகளால்; அவரவர் கொள்கை வழியில் ;தேசத்தின் விடுதலையை கூர்மைப்படுத்தினர்.
அது போல், நமது தமிழ் நிலத்தில் விடுதலைக்காக அறப்போர் புரிந்திட்ட தலைவர்களின் பட்டியல் எதற்கும் குறைந்தது அல்ல.
இன்று சுதந்திரத்தின் பலன்களை அனுபவிக்கும் நாம் அனைவரும்; இதற்காக தங்களின் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்திய நமது முன்னோர்களுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.
அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை நமக்கு உள்ளது என தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான சாதிர் விசிக மண்டல செயலாளர் சித்திக் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
சமுக ஆர்வலர்கள் முஸ்தபா மைதீன் பாதுஷா முஸ்தபா ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் சிக்ந்தர் மாவட்ட அவைத்தலைவர் செய்யது அலி
மாவட்ட துணை செயலாளர் ராஸ்க் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் அஜ்மீர் ஒன்றிய செயலாளர் ஜின்னா ஒன்றிய பொருளாளர் ரிபாய் நகர செயலாளர் போரிங் பாஷா நகர பொருளாளர் கோபிநாத் நகர அவைத்தலைவர் ஜெய்லானி மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்