சின்ன பேட்டிக்கானப்பள்ளி கிராமத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துப்புகானப்பள்ளி ஊராட்சி, சின்ன பேட்டிக்கானப்பள்ளி கிராமத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி எம்.எல்.ஏ, ஊர் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
அப்பொழுது குடிநீர் வசதி, மயானம், பேருந்து வசதி, கழிவுநீர் கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கை முன் வைத்தனர். அப்பொழுது எம்எல்ஏ அவர்கள் படிப்படியாக மனுக்கள் மீதான நடவடிக்கை நிறைவேற்றித் தரப்படும் என கூறினார்.
உடன் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
செய்தியாளர்
மாருதி மனோ