சுந்தரபாண்டியபுரம் பேரூர் இளைஞரணி சார்பில் சாதனை விளக்க பொதுக் கூட்டம் .!
தென்காசி

சுந்தரபாண்டியபுரம் பேரூர் இளைஞரணி சார்பில் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
தென்காசி ஜூலை 5
தென்காசி தெற்கு மாவட்டம் சுந்தர பாண்டியபுரம் பேரூர் இளைஞர் அணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிவேல் என்ற பாலகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் பேரூர் கழக செயலாளர் பண்டாரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொ.அணி தலைவர் மாரிமுத்து பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில பேச்சாளர்கள் உடன்குடி தனபால், வாடியூர் மரியராஜ் வெல்டிங் மாரியப்பன் திராவிட பேச்சாளர் சாக்ரடீஸ் இளம் பேச்சாளர் ரேவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி என்ற சங்கர், தங்கப்பாண்டியன் ஆனந்த் சுந்தர்ராஜ் சுரேஷ் சண்முகவேல் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கனிராஜா, கார்த்திக் பார்த்திபன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சசி முத்துக்குமார் மகேஷ் சரவணன் செல்வம் பேரூர் கழக நிர்வாகிகள் ராமையா அருணாசல ஆவுடையப்பன் ராமகிருஷ்ணன் மகேஸ்வரி துரை சண்முகவேல் தவசி ரத்தினம் ஒன்றிய பிரதிநிதிகள் கணபதி மாசானம் முருகையா மகாலிங்கம், பி எல் ஏ 2 சாமி மாரியப்பன் நடராஜன் துரை இளைஞர் அணி மாதவன் கருப்பசாமி சுரேஷ் பால்ராஜ்தங்கராஜ் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வக்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்