துத்திகுளம் பள்ளியில் 2025 - 26 பள்ளி நாட்காட்டி வழங்கும் விழா .!
தென்காசி

துத்திகுளம் பள்ளியில் 2025 - 26 பள்ளி நாட்காட்டி வழங்கும் விழா
தென்காசி ஜூலை 2
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திக்குளம் இந்து நடு நிலை பள்ளியில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வழங்கும் விழா பள்ளி பேரவையில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி சேசுராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஹைதராபாத் சித்ரா செல்வன்
குடும்பத்தின் சார்பில் ஆண்டு தோறும்அவர்கள் சொந்த செலவில் வழங்கப்படும் பள்ளி நாட்குறிப்பேடு (டைரி ) 2025 - 2026ம் ஆண்டிற்கான 250 டைரியையும் ஒன்று முதல் எட்டு வகுப்புகளில் நடந்து முடிந்த சூன் மாதத் தேர்வில்முதல் மூன்று இடங்களைப் பெற்றபள்ளி மாணவ மாணவிகளைப்
பாராட்டி பரிசுகளையும் பள்ளி நிர்வாகி அருட்திரு சேசுராஜ் வழங்கி பேசினார் .
அவர் பேசும்போது பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கத்தோடும் பண்போடும் வளர வேண்டும்.இன்றைய கால சூழலில் மொபைல் போன் நாம்கல்வி பயில்வதற்கு பெரும் தடையாக இருப்பதிலிருந்து விடுபட்டு நன்கு பயின்று போட்டி தேர்வை எதி ர்கொண்டு
உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜோஸ்பின் தெரசா ,பிரான்சிஸ் அந்தோணியம்மாள், ஜோசப் ஸ்டீபன், செல்வம்,ரோஸி,
சத்யா அடைக்கலம் மேரி,ஆசிரியர்கள் அருள் கனி முத்துலட்சுமி உடற்கல்வி ஆசிரியர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்