தமிழ்நாடு அரசு சார்பாக வீடு தேடி வரும் இலவச முழு உடல் பரிசோதனை முகாம். !

தமிழகம்

தமிழ்நாடு அரசு சார்பாக வீடு தேடி வரும் இலவச முழு உடல் பரிசோதனை முகாம். !

தமிழக அரசு, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைகளை வழங்குகிறது.

இந்தத் திட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 1,256 முகாம்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்.

தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களாகும். அதின் படி மக்கள் நல்வாழ்வு துறையில் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம். இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம். புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப்பெரிய அளவிலான சிறப்பத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" தமிழக முதலமைச்சரால் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை அவ்வபோது பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடற் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15,000/- வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/- வரை செலவாகும். முழு உடற் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் எனும் பெயரினை வைத்து இந்தத் திட்டத்தை வருகின்ற 02.08.2025 அன்று இந்த இடத்தில் திறந்து வைக்க உள்ளார்கள். பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம். இயன்முறை மருத்துவம், நுரையிரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறவிருக்கிறது.

அதேபோல் காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1.5 கோடி குடும்பங்கள் அதன் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெற்று வருகிறார்கள். இருந்தாலும் அந்தத் திட்டத்தில் புதிய பயனாளர்களை சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அலுவலகத்தில் ஏற்பாடுகள் இருக்கிறது. என்றாலும் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தின் மூலம் நடைபெறும் முகாம்களில் புதிய காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

அதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு உலகிலேயே அச்சுறுத்தி வரும் பெரிய நோய் பாதிப்பு புற்றுநோய் பாதிப்பு ஆகும். எனவே புற்றுநோய் பாதிப்புகளை இங்கேயே கண்டறிந்து, கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று பல்வேறு வகைகளிலான ஆண் பெண் என்று இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிகின்ற பணிகளும் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது.

தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் அதாவது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 என்கின்ற வகையில் 1,164 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. சென்னைக்கு அடுத்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. ஆக மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும்.

ஓராண்டு காலத்திற்கு பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பெறும். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.