தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து தீடீரென வெளியேறிதால் பரபரப்பு. !

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து தீடீரென வெளியேறிதால் பரபரப்பு. !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்திற்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வேளாண்மை இணை இயக்குனர் காளியப்பன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினை சேர்ந்த கணேஷ்ரெட்டி, சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தின் வயிலாக வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், கர்நாடகா வனப்பதியில் இருந்து வெளியேறி  தமிழகப் பகுதிகளில் குடிபுகுந்துள்ள யானைக் கூட்டங்களை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், ஏரி கால்வாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும், மழை குறைந்துள்ளதால் மரங்களை காப்பாற்ற மா மரங்களுக்கு டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர்.

அப்போது திடீரென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தில் இருந்து தீடீரென வெளியேறிதால் கூட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள்...... 
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடிய ஈசன் முருகசாமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதேபோல பி.ஆர் பாண்டியனையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. மிகவும் கண்டனத்துக்கு உரியது. விவசாயிகளின் ஆதரவாக குரல் கொடுத்ததற்கு காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது என்பது விவசாயிகள் மத்தியில்  பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது. 
ஆகையால் தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்காக போராடிய விவசாய  சங்கத்தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கறிக்கோழியின் விலையை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் இல்லையில் தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ