துரிஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
துரிஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகளை விரைவாக செயல்படுத்தப்பட என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னிலை வைத்தார். மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்பட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மேல் தக்க குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யப்பட வேண்டும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்பாடு இல்லாத மண்பானைகளை அகற்றப்பட வேண்டும்.

பழைய பொருள்கள் மற்றும் தேங்காய் மட்டைகள்,செடி வளர்க்கும் தொட்டிகள் மட்டுமின்றி வீடுகளில் அருகாமையில் தண்ணீர் தேங்காத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் செய்யப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது மேலும் வேளாண் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட இந்த கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
