தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை.!
கோவை
துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் வீரமரணம் அடைந்த விங் கமாண்டர் நாமன்ஷ் சாயல் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், விமானப் படை அதிகாரிகள் நாமன்ஷ் சாயல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நாமன்ஷ் சாயலின் உடல் அவரின் சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. இவரின் மனைவி அஃப்சானும் சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டராக உள்ளார்.
துபை விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேஜஸ் விமானம் நேற்று (நவ. 22) விபத்துக்குள்ளாகி வெடித்துச்சிதறியது. இதில், அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற விங் கமாண்டர் நமான்ஷ் சாயல் உயிரிழந்தார்.
