தமிழக முதல்வரும் கிருஷ்ணகிரி மாவட்ட அகழ்வாய்வுகளும் .!
கிருஷ்ணகிரி
தமிழக முதல்வரும் கிருஷ்ணகிரி மாவட்ட அகழ்வாய்வுகளும் என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வரின் தொல்லியல் சார்ந்த ஆர்வம் மற்றும் அவர் நமது மாவட்டத்திற்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் , நமது மாவட்ட வரலாறு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்க, நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கூட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் வருகின்ற 12.08.25 செவ்வாய்க்கிழமை அன்று, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். மதிப்புமிகு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
