பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கும் பணி. !

கிருஷ்ணகிரி

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கும் பணி. !

கிருஷ்ணகிரி அருகே உள்ள அண்ணா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கும் பணியினை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைத்து அனைவருக்கும் தண்ணீர் வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துள்ளது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்  சோக்காடி ராஜன் தலைமையில் நடைபெற்றது,


 
இந்த விழாவிற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு மேல்நிலை குடிநீர்தொட்டி அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து பணிகளையும் துவக்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினார்.

மேலும் விழாவின்  வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சூர்யா பெருமாள், அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் ஆஜி, அதிமுக மகளிர் அணி தலைவி திருமதி சுகந்தி மாது, கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் மாதேஷ் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த அப்பாத்துரை,  லட்சுமணன், தவமணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ