கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 294 தொகுப்புகள் வழங்கிடும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளிலுள்ள 171 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 294 தொகுப்புகள் வழங்கிடும் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிருஷ்ணகிரி ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.


விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ்., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.
உடன் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
