வேளாண் வணிகத்துறையின் மூலம் ரூ.26.82 கோடி மதிப்பில் விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னபள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் ரூ.26.82 கோடி மதிப்பில் விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) சிவநதி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் அருள்மணி, நபார்டு உதவி பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
