இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா.!
தென்காசி
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா
தென்காசி - டிச 11
மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை
ஆசிரியர்கள் சித்திரை சபாபதி, சொர்ணசிதம்பரம், செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்லாசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
தமிழாசிரியர் ஐயப்பன் பாரதியின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
7ம் வகுப்பு மாற்றுத் திறனாளி மாணவி
ஆருஷியுடன் இந்துஜா, இசக்கியம்மாள்
ஆகியோர் பாரதியின் பாடல் " மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியின் பாடலை பாடிக்கொண்டே பத்து நிமிடங்களில் அவரது ஓவியத்தை வரைந்து காட்டினார்கள். இந்
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் கணேசன் , இசை ஆசிரியர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். மாணவி முத்ரா நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
