கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய விருப்ப மனு அளித்த ரகமத்துல்லா. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தனது விருப்ப மனுவினை ரயில்வே குழு உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா சத்தியமூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.
தமிழகத்தில் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை சென்னை சத்திய மூர்த்தி பவனில் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், சேலம் மண்டல ரயில்வே குழு உறுப்பினருமான தளபதி ரகமத்துல்லா தனது விருப்ப மனுவை வழங்கினார்,
அப்போது பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வைத்து இருக்கிறேன். சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன் இத்தொகுதியை 2011 ல் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளது. ஆகையால் இம்முறை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த தன்னை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தருமாறு வேண்டி தனது விருப்ப மனுவினை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
