நீலாங்கரை கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றிய மீனவர்கள். !

சென்னை

நீலாங்கரை கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றிய மீனவர்கள். !

நீலாங்கரை கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை நீலாங்கரை பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்கள் கடலில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 
கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மிதந்த தன்னை காப்பாற்றுமாறு கை அசைத்துவாறே கடல் நீரில் மிதந்து சென்றுள்ளார்.

இதைப் பார்த்த கடற்கரையில் இருந்த காதல் ஜோடிகள் அந்த வாலிபரை காப்பாற்றும் படி கூச்சலிட்டனர்.

கடல் அலையில் அடித்துச் சென்ற வாலிபரை பார்த்த பெரிய நீலாங்கரை மீனவ கிராமத்தை  சேர்ந்த நேசமுத்து மற்றும் சஞ்சய் ஆகியோர் நீந்தி சென்று கடலில் தத்தளித்த வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து வந்த நீலாங்கரை போலீசார்  அந்த வாலிபரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்வந்த்(30)என தெரிய வந்தது, தொடர்ந்து நீலாங்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

காவல்துறையினர் இளைஞரை கடலில் இறங்கி காப்பாற்றி மீனவ மக்களை பாராட்டினர்.

செய்தியாளர்

       S S K