விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் .!
கிருஷ்ணகிரி
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாகலூர், பேரிகை, அஞ்செட்டி, குப்பச்சிபாறை, போடிச்சிப்பள்ளி, மதகொண்டப்பள்ளி ஆகிய இடங்களில், நடப்பு பருவத்திற்கு 1 கிலோவிற்கு ரூ.48.86 என விலை நிர்ணயிக்கப்பட்டு, இராகி கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்காரப்பேட்டை பகுதி விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையான ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை, புளியனூர் கடப்பாறை அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் துவக்கி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ
