நெடுங்கல் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.!

கிருஷ்ணகிரி

நெடுங்கல் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.!

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், நெடுங்கல்  ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான  தே.மதியழகன்., MLA  துவக்கி வைத்து  சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி மகிழ்ந்தார்.

உடன் பள்ளி ஆசரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும்  மாநில,  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்  கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ