தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பா.ம.க புகார் மனு.!
தென்காசி
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பா.ம.க புகார் மனு
தென்காசி நவ 06
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆணைக்கிணங்க மாநில துணைத் தலைவர் அய்யம் பெருமாள் பிள்ளை, திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோர் ஆலோசனையோடு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து தென்காசி மாவட்ட பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் பா சிங்கராயன் தலைமையில் தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு எஸ் பி வழியாக புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
இனி ஒரு முறை எந்த ஒரு மாவட்டத்திலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வலியுறுத்தியும் சமூக ஊடகங்களில் கலவரத்தை தூண்டும் விதமாக பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இப் புகார் மனுவினை அளித்தனர்.
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் திருமலை சாமி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி சுந்தர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட துணைச் செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன், குலசேகரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து குமார், மகளிரணி தலைவி மகேஷ், மகளிரணி செயலாளர் செல்வி, மகளிரணி ஒன்றிய செயலாளர் ராமலெஷ்மி, மகளிர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி, செங்கோட்டை நகர தலைவர் செண்பக குமார், ஒன்றிய செயலாளர்கள் சாமி @ பரமசிவம், அனந்த ராஜ் இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சந்திர சேகர், சமூக நீதி பேரவை வழக்கறிஞர் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் உதயகுமார், தங்கம் அனந்த ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
