வானவில் மன்றம் அறிவியல் உபகரணங்கள் வழங்கல்.!
தென்காசி
வானவில் மன்றம் அறிவியல் உபகரணங்கள் வழங்கல்
தென்காசி நவ - 06
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் இயங்கும் அரசு பள்ளிகளில் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்ற நோக்கத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை ஊக்கு விக்கவும் , ஏன் ? எதற்கு? எப்படி ? என்ற வினாக்களுக்கு விடைகாணவும், எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பிக்கவும், பாடப் பகுதிகளில் தொடர்புடைய கணித செயல் பாடுகளை கொண்டு சேர்க்கவும் மாநிலம் முழுவதும் 710 கருத்தாளர்களை நியமித்து நடத்தி வருகிறது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 10 பேர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான மீளாய்வு கூட்டம் உதவி திட்ட அலுவலர் காதர் மீரான் ஆலோசனையில்
முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர் மதுபாலா மற்றும் மாவட்ட கருத்தாளர் ஐயப்பன் இணைந்து பயிற்சியளித்தார்கள்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மீளாய்வு செய்தார். இரண்டாம் பருவத்திற்கான அறிவியல் உபகரணங்களை மாவட்டக் கல்வி அலுவலர் கண்ணன் வழங்கினார்.

பணி மாறுதல் பெற்றுச் செல்லும் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி வாழ்த்தினார். நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகேசன், கண்ணன் , வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் சத்யா நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
