விவசாயிகளுக்கு ரூ 10,000 மானியம், தமிழ்நாடு அரசு அறிவிப்பு. !
விவசாயம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருதி தமிழக அரசு புதிய மானியத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக 10000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக நெல் மற்றும் சிறுதானியங்களை பயிரிடும் 50,000 விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு அரசு சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் வேளாண்துறை இணையதளத்தில் விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
