ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி

ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட  கிளை அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் மாவட்ட  சேர்மேன் சூ.செபாஸ்டியன், செயலாளர் நா.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பா.சரஸ்வதி அவர்களும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) & இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கிளையின் துணைத் தலைவர்  ந.ராமஜெயம் அவர்களும், ஆதார் சேவை மையத்தை துவக்கி வைத்தார்கள். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆதார் சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.முருகவேல், தி.பாக்கியலட்சுமி மற்றும் ரெட் கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆதார் சேவை மையத்தில்  ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல்  மற்றும் ஆதார் புதுப்பித்தல், பெயர் திருத்தம் செய்தல், செல் நம்பர் மாற்றம் செய்தல்,  முகவரி மாற்றம் செய்தல் , பிறந்த தேதி மாற்றம் செய்தல் உள்ளிட்ட ஆதார் சேவைகள் அனைத்தும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

செய்தியாளர்

மாருதி மனோ