தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல வாரியம் சார்பில் தமிழ்நாடு அரசு தொழில் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. !
சென்னை
நாட்டில் வீட்டு வேலை தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு தனி மதிப்பு கொடுக்கிறது இந்த அரசு அதனால்தான் 250 கிலோமீட்டர் தொலைவிலிருந்து என்னை உங்களை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுப்பி உள்ளார் என அமைச்சர் சிவி.கணேசன் பேச்சு
திமுக அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது ஓட்டுக்காக என்று ஆனால் உண்மை உங்களுக்கு தெரியும் மகளிர்களுக்காக குறிப்பாக ஏழை எளிய மகள்களுக்காக இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது என்று அமைச்சர் சிவி.கணேசன் பேச்சு
உலகம் முழுவதும் அக்டோபர் ஏழாம் தேதி வீட்டு வேலை தொழிலாளர்களுக்காக decent work day கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கலைஞர் கலையரங்கத்தில் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல வாரியம் சார்பில் தமிழ்நாடு அரசு தொழில் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு வேலை செய்யும் மகளிர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல வாரியம் சார்பில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்காக ஐந்து கோரிக்கைகளை அமைச்சர் சிபி கணேசன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன
தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல வாரியம் வைத்த கோரிக்கைகள்
வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான முழுமையான மத்திய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
பணியிடத்தில் பாதுகாப்பு பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம் குறைதீர்க்கும் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு ESI PF மற்றும் பிற நலன்கள் வழங்கப்பட வேண்டும்.
குறைந்தபட்ச கூலி 100 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களுக்கு பதிவு கண்காணிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு உறுதி செயல்பட வேண்டும்
*வீட்டு வேலை செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசியது*
நாட்டில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை
தமிழக அரசு வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது அவர்களுக்கு பல சலுகைகளும் தமிழக அரசு அளித்து வருகிறது
வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து உங்களை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் என்னை அனுப்பி உள்ளார்
எனவே உங்கள் பிள்ளைகளை ஒரு கலெக்டராகவோ மருத்துவராகவோ உயர்ந்த பதவி வகிக்கக்கூடிய படிப்புகளை படிக்க வையுங்கள் அரசு உங்களுக்கு முழு உறுதுணையாக இருக்கும்
திமுக அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது ஓட்டுக்காக என்று ஆனால் உண்மை உங்களுக்கு தெரியும் மகளிர்களுக்காக குறிப்பாக ஏழை எளிய மகள்களுக்காக இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது என்று
மற்றும் வீட்டு வேலை தொழிலாளர்களுக்காக தமிழக அரசு வழங்கக்கூடிய சலுகைகளை பற்றி பேசினார்.
செய்தியாளர்
S S K
