தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மறைந்த முன்னாள் தலைவர் டி.எஸ்.ஆரின் 80 வது பிறந்தநாள் விழா.!
சென்னை
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மறைந்த முன்னாள் தலைவர் டி.எஸ்.ஆரின் 80 வது பிறந்தநாள் விழா.
நேற்று மாலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர் தோழர் அய்யநாதன் DSR படத்தை திறந்து வைத்து பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பேசினார்.
பத்திரிகையாளர் குரல் சிறப்பிதழை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பேரரசு வெளியிட, தேசிய குழு உறுப்பினர்,வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வெற்றி என்பது வாழ்வில் மட்டும் அல்ல, வீர மரணம், தியாகம் போன்ற பல வகையில் உள்ளது என்று பேசினார் இயக்குனர் பேரரசு.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தான் DSR அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசினார் மூத்த பத்திரிகையாளர் " தாய்" பிரபு.
முன்னாள் மகளிர் ஆணையத்தின் தலைவர், வழக்கறிஞர் கௌரி அசோகன், எம்.டி.இராமலிங்கம்,கழுகு கே.ராஜேந்திரன், பொன்னேரி பாலகிருஷ்ணன், மெய்யழகன், தயாரிப்பாளர் இயக்குனர் ARK ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி, கவிமாமணி தாமரைப்பூவண்ணன்,கவிஞர் சிந்தை வாசன், A.லட்சுமணன், கழுகு வீரா, போரூர் P.பார்த்திபன், மருத்துவர் விஜய்பாபு, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் பாலசுப்ரமணியன், இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் ரமேஷ் பிரபாகர்,விவசாயி ஜெயராமன், திருப்பதி நேரு, புறா ரமேஷ்பாபு, ஏர்டெல் பாலமுருகன், PRO அருண்குமார், மக்கள் மனசு சுந்தர், சேலம் கோவிந்தராஜன், கேட்ரிங் அருண், செங்கல்பட்டு இராமலிங்கம், வெங்கடேசன், மடிப்பாக்கம் சேகர், உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலா தேவி ரவீந்திரதாஸ், டி.எஸ்.ஆர்.சுபாஷ், விஜி சுபாஷ் அனைவரையும் வரவேற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
