தென்காசி குற்றாலம் பகுதிகளில் கடும் குளிர் .!

தென்காசி

தென்காசி குற்றாலம் பகுதிகளில் கடும் குளிர் .!

தென்காசி குற்றாலம் பகுதிகளில் கடும் குளிர் 

தென்காசி, நவ - 29

தென்காசி மாவட்டம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையினால் பொதுமக்கள் சிரமம் அடைந்த நிலையில் நேற்று காலை முதல் தென்காசி பகுதியில் மழை இல்லை ஆனாலும் கடும் குளிராக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது இதனால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

ஆனாலும் வழக்கத்துக்கு மாறாக தென்காசி குற்றாலம் பகுதிகளில் அதிக அளவில் குளிர்  இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது இது ஐயப்பன் சீசன் காலம் மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட  அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை என்று சொல்வதைப் போல தென்காசி மாவட்டத்தில் மழையின் வேகம் சற்று குறைந்த நிலையில் குளிர் அதிகமாக அடிக்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். 

இதனால் தென்காசி குற்றாலம் பகுதியில் வெயில் அடிக்கும் வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

செய்தியாளர் 

மாருதி மனோ