விஸ்வநாதர் ஆலயத்தில் பொருள்கள் பாதுகாக்கும் அறை கட்டுமான பணிக்கு பழனி நாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் .!

தென்காசி

விஸ்வநாதர் ஆலயத்தில் பொருள்கள் பாதுகாக்கும் அறை கட்டுமான பணிக்கு பழனி நாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் .!

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பொருள்கள் பாதுகாக்கும் அறை கட்டுமான பணிக்கு பழனி நாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

தென்காசி ஆகஸ்ட் 6

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான 
எஸ்.பழனி நாடார் தனது சொந்த செலவில் பக்தர்களின் வசதிக்காக, பக்தர்கள் பொருட்களை பாதுகாப்பதற்கு பாதுகாக்கும் அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார்.கோயில் நிர்வாக அதிகாரி பொன்னி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள்
 ஏஜிஎம். கணேசன், சந்தோஷ், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர்,மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மகளிர் காங்கிரஸ் பூமாதேவி, வட்டார தலைவர்கள் பெருமாள், கதிரவன், டிரஸ்ஸில் குரூப்ஸ் கங்காதரன்,கவுன்சிலர் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் பிரேம் குமார், ராஜீவ் காந்தி, மாநில பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, டி கே பாண்டியன், தாயார் தோப்பு ராமர், பொருளாளர் ஈஸ்வரன், நகர துணை தலைவர்கள் சித்திக், தேவராஜன்,    அசன் இப்ராஹிம், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்