கீழப்பாவூர்  சுற்று வட்டார அனைத்து பள்ளி விஞ்ஞான துளிர் வாசகர்கள் அறிவியல் சுற்றுலா.!

தென்காசி

கீழப்பாவூர்  சுற்று வட்டார அனைத்து பள்ளி விஞ்ஞான துளிர் வாசகர்கள் அறிவியல் சுற்றுலா.!

கீழப்பாவூர்  சுற்று வட்டார அனைத்து பள்ளி விஞ்ஞான துளிர் வாசகர்கள் அறிவியல் சுற்றுலா

தென்காசி -நவ 09

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எம். எஸ். பி. வி. லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் , புளு ரே ஈவன்ட்ஸ் தென்காசி இணைந்து கீழப்பாவூர் சுற்று வட்டார அனைத்து பள்ளி விஞ்ஞானத் துளிர் வாசகர்களுக்கான அறிவியல் சுற்றுலா நடைபெற்றது.

இச் சுற்றுலாவிற்கு புளூ ரே ஈவன்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் தலைமை வகித்தார்.

சிவநாடானூர் இந்து நடுநிலைப் பள்ளி நிர்வாகி செல்வ சவுந்திர பாண்டியன்,
வட்டார கல்வி அலுவலர் குருசாமி, 
எம்.எஸ் .பி. வி . லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் ஆய்வக உதவியாளர்கள் சரவணசுரேஷ், மாரியப்பன், பொன் ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். அறிவியல் சுற்றுலாவின் நோக்கம் குறித்து அறிவியல் இயக்க கீழப்பாவூர் கிளை செயலாளர் ஆசிரியர் செல்வன் எடுத்துக் கூறினார்.

கண்தான விழிப்புணர்வு குழு  நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க நிர்வாகியுமான தொழிலதிபர் 
கே. ஆர். பி. இளங்கோ பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இச்சுற்றுலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  எம். எஸ். பி. வி . லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் ராஜேஸ் சங்கர குமார், தாளாளர் லட்சுமி ஆனந்த், முதல்வர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

200 மாணவர்கள் மூன்று பேருந்துகளில் நெல்லை அரசு அருங்காட்சியகம், தொல்லியல் சான்றுகள், கண்டுகளித்தனர்.

மாவட்ட அறிவியல் மையத்தில் மின்னணு கண்காட்சி, விந்தை ஆடிகள், வேடிக்கை விஞ்ஞானம், கூடன்குளம் அணு உலை மாதிரி, இஸ்ரோ வின் சாதனைகள், நவீன தொழில் நுட்ப 3D மாதிரிகள் கண்டு களித்தனர்
அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரி லெனின் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தார்
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மதியழகனின் சுற்றுச் சூழல் - காகம்  நாடகம் 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திருநெல்வேலி பாதுகாப்பு  அலுவலர் கணேசன் உள்ளம் மகிழ உளவியல் விளையாட்டுக்கள் என்ற தலைப்பில் விளையாட்டுக்களை நடத்தினார்.

அறிவியல் இயக்க ஆர்வலர் ஆசிரியர் அம்பிகா , வானவில் மன்ற கருத்தாளர்கள் மதுபாலா, ராமலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வ ராணி , வசந்தா, லதா  முனைவர் முகம்மது, முனைவர் ஆயிசா பிர்தெளஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சிவா நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்